சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் தகவல் அறியும்‌உரிமைச்‌சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

தகவல் அறியும்‌ உரிமைச்‌ சட்டம் 2005 ன் நோக்கம், அடிப்படைக் கூறுகள், முக்கியத்துவம், பயன்பாடுகள் ஆகியவை  பற்றிய  விழிப்புணர்வை  ஏற்படுதாதும்‌ விதமாக ஒவ்வொரு ஆண்டும் "தகவல் அறியும்‌ உரிமைச் சட்ட விழிப்புணர்வு வாரம்" அக்டோபர் 5 முதல் 12 வரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் தகவல் அறியும்‌உரிமைச்‌சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் முனைவர் க.‌ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 சத்தியமங்கலம் வட்ட தன்னார்வத் தொண்டு நிறுவன 'சுடர்' அமைப்பின் இயக்குநர் திரு. ச.சி. நடராஜன் சிறப்பு‌விருந்தினராகக் கலந்துகொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்ட நோக்கம் மற்றும் அதற்கான பொதுவிழிப்புணர்வை மணாக்கர்களிடையே‌ ஏற்படுத்தி உரையாற்றினார். முன்னதாக, இக்கருத்தரங்கிற்கு வருகைபுரிந்தோரை வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் க. பொங்கியண்ணன் வரவேற்றார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.