கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு வாரகால வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோபி ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக ஒரு வார காலம் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
 
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருப்பொருளை உணர்த்தி நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளை நடத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 50 ஊராட்சி மன்றங்களில் அனைத்து பொது இடங்களிலும் நடைபெற்றது.

கல்லூரியின் சார்பாக நடைபெறும் இந்த நிகழ்விற்கு கல்லூரியின் செயலாளரும் பவானி சட்டமன்ற உறுப்பினருமான திரு. கே.சி. கருப்பணன் தலைமை வகித்தார்.

முதல் நாள் நிகழ்வாக அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புஞ்சை துறையம்பாளையத்தில்  வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் தலைமை வகித்தார். 
துணை முதல்வர் முனைவர் சி. நஞ்சப்பா முன்னிலை வகித்தார்.
இந்த பேரணியில் தன்னார்வலர்கள் பொது மக்களுக்கு நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் முழக்கங்களாக கூறினர்.

பேரணி முடிந்த பின்னர் ஒவ்வொரு நாளும் அந்தியூர், பவானி, கோபி ஆகிய சட்டமன்றங்களில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்களின் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பாடல் பாடியும், நடனம் ஆடியும், நாடகம் நடத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

இந்த நிகழ்வுகளுக்கு அண்ணாநகரைச் சார்ந்த கலைத் துறையில் பணியாற்றி வரும் திரு.சக்திவேல் உறுதுணையாக இருந்து தன்னார்வலர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வினை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் திரு. கிருஷ்ணகுமார் மற்றும் திரு. அஜித்குமார் ஒருங்கிணைத்தார்கள்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்
ஹரி பிரசாத், பரமசிவன், இளங்கோ, கௌதம், ஜெகதீஸ்வரன், சசிக்குமார், லிங்கபூபதி, அருண்குமார் மற்றும் ரவீந்தர் ஆகியோரை கல்லூரி நிர்வாகத்தினர், பொது மக்கள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் போன்றோர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

செய்தியாளர் : ஆசிரியர் சிவகுமார்

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.